மொட்டை மாடியில் அரசுப்பள்ளி; வெயிலில் அமர்ந்து பாடம் கற்கும் மாணவர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாலிகானப்பள்ளி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளி வாடகை வீட்டின் மொட்டை மாடியில் செயல்பட்டு வரும் நிலையில், பள்ளி கட்டிடத்தை விரைந்து கட்டுமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாலிகானப்பள்ளி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த அரசுப்பள்ளி கட்டிடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் பயன்படுத்த முடியாத சூழலில் இருந்தது. இதனால் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மூலம் பள்ளி கட்டிடத்தை இடிக்க முடிவெடுக்கப்பட்டு பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது.
7 மாதங்களில் 106 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து கோவை பெண் சாதனை
பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அருகில் உள்ள இரண்டு வீடுகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு அங்கு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அங்கிருந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ள மற்றொரு வீட்டில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
மதுரையில் இருந்து சென்னைக்கு பறந்த இதயம்; 2 மணி நேர திக் திக் பயணம்
3 முதல் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு படித்து வரும் மொட்டை மாடி வகுப்பறைக்கு சென்று அங்கு மதிய உணவை சாப்பிட்டு வருகின்றனர். இது தொடர்கதையாக உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்திற்கு பதில் அங்கு தற்போது வரை புதிய பள்ளி கட்டிடம் கட்டிக் கொடுக்கப்படவில்லை, இதனால் அரசு பள்ளியில் தொடக்க கல்வியை பயிலும் மாணவர்கள் பெரும் அவதிகளை சந்தித்து வருகின்றனர்.
எனவே உடனடியாக பாலிகானப்பள்ளி கிராமத்தில் புதிய அரசு பள்ளி கட்டிடத்தை கட்டி கொடுத்து மாணவர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தமிழக அரசு மற்றும் பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.