கொரோனாவில் கோரப்பிடியில் இருந்து மக்களை காப்பாற்றுவது, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக தமிழகத்தில், கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகி வருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இன்று ஒரே நாளில் மட்டும் சென்னையில் 1989 பேருக்கு புதிதாக நோய் தொற்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 3 பேர் 30 வயதிற்கும் குறைவான வயதுள்ளவர்கள். 

இதுநாள் வரை தமிழகத்தில், வயதானவர்கள் மட்டுமே அதிகம் உயிரிழந்து வந்த நிலையில் தற்போது, மூன்று இளம் வயதினர் உயிரிழந்துள்ளது பேரதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை சேர்ந்த மருத்துவர் வசந்த குமார் என்பவர், கொரோனா வைரஸை குணப்படுத்த கூடிய மருந்தை கண்டு பிடித்துள்ளதாகவும், இது குறித்த ஆராச்சி கட்டுரைகள் உட்பட அனைத்தையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் நாளுக்கு நாள் அதிக அளவில் மக்கள் கொரோனாவால் பாதிக்க படுவதால், தற்போது  தன்னுடைய மருந்தின் மீதான பரிசீலனையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார். இதனை ஏற்று கொண்ட உயர் நீதி மன்றம், உடனடியாக இவருடைய மருந்தை பரிசீலிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. 

மேலும் வசந்த குமார், தான் உருவாக்கிய மருந்து வெறும் 2 ரூபாய் என்று கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். எனவே விரைவில் இவர் கண்டுபிடித்துள்ள கொரோனா மருந்து குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் பரிசீலனை செய்து நல்ல முடிவை தெரிவிக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.