திமுக சார்பில் 1989 , 1996 சட்டமன்ற தேர்தல்களில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காஞ்சனா கமலநாதன் (64 ) .இவர் திமுக மகளிரணி தலைவியாகவும் உள்ளார் .

கடந்த 2015 ம் ஆண்டு காவேரி பட்டணத்தைச்  சேர்ந்த தேவி ( 43 ) என்பருக்கு 23 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் . அது வங்கியில் பணமின்றி திரும்பியது . இது குறித்த வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது . 

இந்த நிலையில் காசோலை மோசடியில் ஈடுபட்ட காஞ்சனாவிற்கு ஓராண்டு சிறை தண்டனையும் , தேவிக்கு பணத்தை உடனே வழங்க வேண்டும் எனவும் நீதிபதி  தீர்ப்பளித்தார் . தவறும் பட்சத்தில் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது .

இதற்கு முன்பு  செல்வம் என்பவருக்கு 24 லட்சம் காசோலை கொடுத்து ஓராண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார் . அந்த வழக்கில் மேல் முறையீடு  செய்து , பிணையில் வெளிவந்துள்ளார் .