கிருஷ்ணகிரியில் பயங்கரம்; மருமகனை படுகொலை செய்த மாமனார்: காதல் திருமணத்தால் அரங்கேறிய அவலம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட நபரை பெண்ணின் அப்பா, உறவினர்கள் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

construction worker killed by father in law in krishnagiri district

கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன் (வயது 28). இவர் டைல்ஸ் வேலை செய்து வருகிறார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள்   சரண்யாவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு  காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இந்த காதல் திருமணத்தில் பெண்ணின் பெற்றோருக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில், இன்று மதியம் ஜெகன் கிட்டம்பட்டியில் இருந்து டைல்ஸ் வேலை செய்வதற்காக காவேரிப்பட்டணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஜெகனை வழிமறித்த அவரது மாமனார் சங்கர் மற்றும் அவரது  உறவினர்கள் ஜெகன் மீது கத்தியை கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்நிலையில் பொதுமக்கள் அங்கு விரைந்து வந்து பார்க்கும்போது சங்கர் மற்றும் அவருடன் வந்த நபர்கள் தப்பித்து ஓடி விட்டனர். தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது ஜெகனின் உடலை எடுக்க விடாமல் பொதுமக்களும், உறவினர்களும் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். 

அதிமுக பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல், நகை பறிப்பு: சிசிடிவியில் பதிவான பரபரப்பு காட்சி

இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி காவல்துறை துணை  கண்காணிப்பாளர் தமிழரசி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சராஜ் குமார் தாகூர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்து உறவினரிடம் சமாதானம் பேசினர். இதனைத் தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து  சென்றனர். இதைத்தொடர்ந்து ஜெகனின் உடல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

பொது தேர்வுக்கு படிக்க விடாமல் பாலியல் தொந்தரவு; அதிமுக பிரமுகர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

கொலை சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios