ஓசூர் அருகே தனியார் சொகுசு பேருந்தில் திடீரென தீப்பிடித்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

 

பெங்களூரில் இருந்து திருப்பூர் நோக்கி 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 5 மணியளவில் ஒசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென தீப்பிடித்தது. பின்னர் தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. 

ஓட்டுனர் உடனடியாக பேருந்தை நிறுத்தியதால் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். உடனே இது தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதன் காரணமாக சுமார் 2 மணிநேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.