Urban Local Elections: திடீர் மாரடைப்பு.. பிரச்சாரத்தின் போது துடிதுடித்து உயிரிழந்த திமுக வேட்பாளர்..!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டு திமுக வேட்பாளரான ஐய்யப்பனு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனே அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
அந்தியூர் அருகே அத்தாணி பேரூராட்சி 3வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஐயப்பன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள் மற்றும் 483 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டு திமுக வேட்பாளரான ஐய்யப்பனு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனே அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
வேட்பாளரின் உயிரிழப்பு குறித்து செய்தி அறிந்த அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம் நேரில் சென்று ஐய்யப்பன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், தேர்தல் நடக்க 2 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக வேட்பாளர் ஐயப்பன் மறைவால் அப்பகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.