பிரபல கல்வி நிறுவனத்தில் ரூ.5 கோடி ரொக்கம்... ரூ. 150 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல்..!

ஈரோட்டில் நந்தா கல்வி குழுமத்தில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் ரூ.5 கோடி ரொக்கம், ரூ. 150 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

nandha education group IT raids...Rs 150 crore tax evasion

ஈரோட்டில் நந்தா கல்வி குழுமத்தில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் ரூ.5 கோடி ரொக்கம், ரூ. 150 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் உள்ள 22 இடங்களில் நேற்று முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஈரோட்டில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் நந்தா கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக  சோதனை நடைபெற்று வருகிறது. 

nandha education group IT raids...Rs 150 crore tax evasion

உரிமையாளர் சண்முகம் சில ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சண்முகத்தின் பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் அவருக்கு சொந்தமான வீடுகள், பண்ணை வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும், ரூ.5 கோடி ரொக்கம், ரூ. 150 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

nandha education group IT raids...Rs 150 crore tax evasion

கல்வி நிறுவனங்கள் மூலம் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்துவிட்டு குறைவான தொகைக்கு கணக்கு காட்டி ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தது தெரியவந்துள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios