Asianet News TamilAsianet News Tamil

அட கடவுளே.. பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம்.. காதலனுடன் ஒருநாள் கூட வாழாமல் புதுப்பெண் பலி..!

கடந்த 27ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியேறி கார்த்திக்குடன் மதுரைக்கு சென்றார். பின்னர், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 30ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், அன்று மாலையே  பவானி திரும்பினர்.

Married despite parental opposition .. bride dies without even living a day
Author
Erode, First Published Sep 2, 2021, 10:48 AM IST

பெற்றோர் எதிர்த்து கலப்பு திருமணம் கொண்ட புதுப்பெண் காதலனுடன் ஒருநாள் கூட வாழாமல் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் அந்நியூர் அருகே உள்ள பருவாச்சி அம்மன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் சரண்யா(24). இவர் பவானி தலைவாய் பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் (25) என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சரண்யாவின் வீட்டில் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

Married despite parental opposition .. bride dies without even living a day

இந்நிலையில், கடந்த 27ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியேறி கார்த்திக்குடன் மதுரைக்கு சென்றார். பின்னர், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 30ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், அன்று மாலையே  பவானி திரும்பினர்.  பவானி வந்தபோது சரண்யாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. கணவர் கேட்டபோது திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்ததாகவும் வாந்தி எடுத்த பின்னர் சரியாகி விட்டதாகவும் கூறினார். 

Married despite parental opposition .. bride dies without even living a day

இதனால், அதிர்ச்சியடைந்த கணவர் சரண்யாவை பவானியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து அந்நியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரே நாளில் மனைவி உயிரிழந்ததால் கோட்டாட்சியர் விசாரணை நடத்த உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios