ஈரோடு இடைத்தேர்தல் அதிகாரி சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை
ஈரோடு இடைத்தேர்தல் அதிகாரியாக பொறுப்பு வகித்தவரும், ஈரோடு மாநகராட்சி ஆணையருமான சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாநகராட்சி ஆணையராக சிவக்குமார் பொறுப்பு வகித்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற ஈரோடு இடைத்தேர்தல் அதிகாரியாகவும் சிவக்குமார் பொறுப்பு வகித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பல்லாவரம் நகராட்சியில் ஆணையாளராக இருந்தபோது, முறைகேட்டில் ஈடுபட்டதாக சிவக்குமார் மீது புகார் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சிவக்குமார் வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆணையர் சிவகுமார் குடும்பத்துடன் காலையில் வீட்டிலிருந்து வெளியில் சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் இரண்டு காவலர்களை மட்டும் பாதுகாப்பு பணிக்காக வீட்டில் விட்டுவிட்டுச் சென்றனர்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் தந்தை உயிரிழப்பு; மணமகனின் செயலால் நெகிழ்ந்து போன உறவினர்கள்
வெளியில் சென்றிருந்த ஆணையர் மீண்டும் வீட்டிற்கு வந்ததும் உடனடியாக லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரியில் பயங்கரம்; நடு ரோட்டில் மறுமகனை படுகொலை செய்த மாமனார்