அனைவரையும் ஆச்சரியப்படுத்திய திருப்பூரில் நடந்த திருமணம்! அட வேற லெவல் போங்க!

 திருமணங்கள் என்றாலே சமீப காலமாக, ஏதேனும் வித்தியாசமாக நடத்த வேண்டும் என அனைவரும் ஆசைப்படுகின்றனர்.  இதற்காக பிரமாண்டமாக செலவு செய்கின்றனர்.  
 

delicious natural food served in thirupur marriage

 திருமணங்கள் என்றாலே சமீப காலமாக, ஏதேனும் வித்தியாசமாக நடத்த வேண்டும் என அனைவரும் ஆசைப்படுகின்றனர்.  இதற்காக பிரமாண்டமாக செலவு செய்கின்றனர்.  

ஆனால் இயற்கையை பாதுகாக்க வேண்டும், இயற்கை உணவை மட்டுமே பரிமாறவேண்டும் என பலரும் நினைக்கிறார்களா...  என்றால் அது சந்தேகம்தான்.  காரணம் திருமணங்கள் என்றாலே, பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீர், பிளாஸ்டிக் டம்ளர்கள், தட்டுகள், என ஏராளமாக உபயோகிக்கப்படுகிறது. 

delicious natural food served in thirupur marriage

மேலும் சிலர் வாழை இலைக்கு பதிலாக வாழை இலை போல் உள்ள பிளாஸ்டிக் பேப்பர்களை கூட பரிமாறுவதற்கு உபயோகிக்கின்றனர். 

இப்படி ஒருபுறம் இருக்க,  இயற்கையை போராடி காக்க வேண்டும் என்கிற நினைப்பும் ஒரு சிலர் மனதில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.  அப்படித்தான் திருப்பூரில் இயற்கை உணவுகளை மட்டுமே வைத்து தன்னுடைய மகளின் திருமணத்திற்கு உணவு பரிமாறி அசத்தியுள்ளார் உள்ளார் இயற்கை ஆர்வலர் ரவி.

delicious natural food served in thirupur marriage

ஈரோடு மாவட்டம்,  பெருந்துறையை அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி.  இவர் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.  மற்றும் பிளாஸ்டிக் பை , ரசாயன கழிவுகள் தண்ணீரில் கலப்பது போன்றவற்றிற்கு  எதிராக போராடி வருகிறார்.  

இவரின் மகள் கீதாஞ்சலிக்கும், லோகேஸ்வரன் என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடந்துள்ளது.  இந்த திருமணத்தில் இயற்கையாக அவருடைய தோட்டத்தில் விளைவித்த காய்கறிகள், பழங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மழை தண்ணீர் பயன்படுத்தி உணவுகளை சமைத்து உள்ளார். 

delicious natural food served in thirupur marriage

குறிப்பாக இவருடைய இவர் வீட்டின் திருமணத்தில் ஆளிவிதை உருண்டை, கம்பு கருப்பட்டி, தினை உருண்டை, எள்ளு உருண்டை, என பல வகையான வித்தியாசமான உணவு வகைகளையும் இயற்கை தானியங்களை பயன்படுத்திய செய்த உணவுகளையும் செய்துள்ளார்.

delicious natural food served in thirupur marriage

மேலும் தண்ணீருக்காக பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை பயன்படுத்தாமல்,  செம்பு டம்ளரால் தண்ணீர் கொடுக்கப்பட்டது.  இந்த திருமணத்திற்கு வந்த குழந்தைகளுக்கு நுங்கில் தயார் செய்த வண்டிகள் மற்றும் சிறுதானிய செய்யப்பட்ட இனிப்பு வகைகளும் செய்து கொடுத்து அசத்தியுள்ளார். எனவே தற்போது திருப்பூர் முழுக்க இவை வீட்டு திருமணம் பற்றி தான் பலரும் வியர்ந்து பேசி வருகிறார்களாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios