எப்போதும் மொபைலில் கேமிங்.. மாணவர் எடுத்த விபரீத முடிவு..!

பிளஸ்-2 மாணவர் தனது மொபைல் போனில் வீடியோ கேம் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளார். 

 

Boy Dies By Suicide After Parents Scolded Him For Playing Video Games

வீடியோ கேம் விளையாடுவதை எதிர்த்து பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த 18 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. மாணவரின் தற்கொலை காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

மலையம்பாளையம் போலீசார் அளித்த தகவல்களின் படி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கொடுமுடி பகுதியில் உள்ள வெள்ளோட்டம்பரப்பு பகுதியில் வசித்து வந்த பிளஸ்-2 மாணவர் தனது மொபைல் போனில் வீடியோ கேம் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளார். பெற்றோர் எவ்வளவு சொல்லியும் கேட்காத மாணவர் தொடர்ந்து மொபைலில் கேம் விளையாடி வந்துள்ளார். 

மாணவர் தற்கொலை:

மாணவரின் பெற்றோர் வேலைக்கு சென்று இருந்த நிலையில், அவர்களின் மகன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதை அடுத்து தற்கொலை செய்து கொண்ட மாணவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் மாணவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

மாணவரின் தற்கொலை குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருக்கின்றனர். மேலும் தற்கொலை செய்து கொண்ட மாணவர் தொடர்ச்சியாக மொபைல் போனில் கேம் விளையாடியதில் மனமுடைந்து காணப்பட்டார் என்றும், இதன் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்து உள்ளனர். 

பெற்றோர்:

தற்கொலை செய்து கொண்ட மாணவரின் கணவன்- மனைவி இருவரும் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வருகின்றனர். பிளஸ்-2 மாணவரின் ஹரிபிரகாஷ் பொதுத்தேர்வு எழுதி வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் ஹரி பிரகாஷ் அடிக்கடி செல்போனில் வீடியோ கேம் விளையாடி, அதில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios