ஈரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கணக்கம்பாளையம் சின்னகாளியூரைச் சேர்ந்த ரஞ்சித் என்ற தங்கராஜ் (30). மெக்கானிக் கடை நடத்திவந்தார். அதேப் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (35) ஒப்பந்த மின்வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் பவானி - சத்தியமங்கலம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுகொண்டிருந்தபோது கள்ளிப்பட்டி திரையரங்கு அருகே நிலைதடுமாறி சாலையோர மின்கம்பத்தில் மோதினர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், இருவரும் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். 

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இருவருக்குமே திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளது.