தாராபுரத்தில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 தாராபுரத்தில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தாராபுரம் தொண்டாமுத்தூர் திம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் குமரன் (48). இவர் நேற்று தேர்பாதை என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது எதிரே அதேபகுதியில் சேர்ந்த ஈஸ்வரன் (46) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

வேகமாக வந்த 2 இருசக்கர வாகனங்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு ஈஸ்வரன் மற்றும் குமரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.