Asianet News TamilAsianet News Tamil

பழனி : ஆசிரியர் அடித்ததில் மாணவன் மருத்துவமனையில் அனுமதி! போலீசில் புகார்!

பழனியருகே ஏழாம்வகுப்பு மாணவனை, உடற்கல்வி ஆசிரியர் கடுமையாக தாக்கியதில் மாணவன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்வதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
 

The student was admitted to the hospital after being beaten by the teacher! Complain to the police near palani
Author
First Published Mar 25, 2023, 7:27 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் கார்த்திகேயன். சவரத்தொழிலாளியான இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும், ஹரிராம் என்ற 13வயது மகனும் உள்ளனர்‌. மகன் ஹரிராம் பழனியருகே நெய்க்காரபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம்போல பள்ளிக்கு சென்ற மாணவன் ஹரிராம், கை‌, கால் மற்றும் உடலில் காயங்கள் மற்றும் தழும்புகளுடன் மாலையில் வீட்டிற்கு திரும்பினார்.மகனின் உடலில் உள்ள காயங்களை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து மாணவன் மற்றும் பெற்றோர் கூறியதாவது:- பள்ளி முடிந்தவுடன், வீட்டிற்கு செல்வதற்காக பள்ளி பேருந்தில் ஹரிராம் ஏறிய பொழுது, பேருந்தின் இருக்கையில் அமர்வதில் சக மாணவர்களுடன் மோதல் ஏற்பட்டது.இதில் ஹரிராமை இரு மாணவர்கள் தாக்கியதாகவும், இதையடுத்து ஹரிராம் அந்த இரு மாணவர்களையும் தாக்கியதாகவும் தெரிகிறது. இதையடுத்து பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் சுரேந்தர் என்பவர் சிறுவன் ஹரிராமை சிசிடிவி இல்லாத அறைக்கு அழைத்துச்சென்று, பிரம்பால் கடுமையாக தாக்கியதாக சிறுவன் தெரிவித்தார். மேலும் அடித்ததை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டியதாகவும் தெரிவித்தான்.

5 லட்சம் தரேன் அந்த இடத்தை காட்டு.. கேன்சரால் அவதிப்படும் 'அங்காடி தெரு' சிந்துவுடம் கொச்சையாக பேசிய நபர்!

இதுதொடர்பாக, மாணவனின் தந்தை கார்த்திகேயன் பழனி தாலுகா போலீசாரிடம் புகார் அளித்தார். பழனி தாலுகா போலீசார் சிறுவனிடம் தொடர்ந்து விசாரித்தபடியே உள்ளனர். ஆனால் வழக்குப்பதிவு எதுவும் செய்யவில்லை. அதுமட்டுமல்லாமல் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக தொடர்ந்து பேசுவதும், சமரசம் செய்வதுமாக உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்‌. மேலும் மகனை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காவிடில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று மாணவனின் தந்தை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios