தீண்டாமையின் உச்சக்கட்டம்... துணைத்தலைவருக்கு நாற்காலி.. ஊராட்சி மன்ற தலைவருக்கு தரை..!
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், புதுசத்திரம் ஊராட்சியில் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் மெர்சி, என்ற லட்சுமி. இவர் அருந்தியர் சமூகத்தை சேர்ந்தவர். இந்த பெண் தலைவராக பதவியேற்ற காலத்திலிருந்தே இங்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தனது பணிகளை பார்த்து வருகிறார்.
திண்டுக்கல் அருகே வார்டு உறுப்பினர்கள், துணைத்தலைவர் ஆகியோர் நாற்காலியில் அமர்ந்து பணிபுரியும் போது , ஊராட்சி தலைவர் தரையில் அமர்ந்து பணி புரியும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இது தீண்டாமை வன்கொடுமையின் உச்சக்கட்டம் என்று கூறப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், புதுசத்திரம் ஊராட்சியில் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் மெர்சி, என்ற லட்சுமி. இவர் அருந்தியர் சமூகத்தை சேர்ந்தவர். இந்த பெண் தலைவராக பதவியேற்ற காலத்திலிருந்தே இங்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தனது பணிகளை பார்த்து வருகிறார்.
ஆனால், துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் நாற்காலியில் அமர்ந்திருக்க, இவர் மட்டும் தரையில் அமர்ந்துள்ளார். இவரை யாரும் நாற்காலியில் அமரும் படி கூறுவது கிடையாது. இதற்கு சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது நவீன காலத்தில் தீண்டாமைக் கொடுமையால் ஊராட்சி மன்ற தலைவர் தரையில் அமர்ந்திருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.