Watch : கோடையை கொண்டாட கொடைக்கானலுக்கு வந்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி!
மூன்று நாள் பயணமாக தமிழ்நாடு ஆளுநர் ரவி, கொடைக்கானலுக்கு வந்துள்ளார். அவர், கோஹீனூர் பங்களாவில் தங்கியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சுற்றுலா தளமான கொடைக்கானலுக்கு தமிழக ஆளுநர் ஆர் என் ரவி சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்து, அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் கோஹினூர் பங்களாவிற்கு வந்தடைந்தார்.
கொடைக்கானல் வந்த ஆளுநரை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் மற்றும் அரசு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும் காவல்துறை சார்பாக அணிவகுப்பு மரியாதை ஆளுநருக்கு வழங்கப்பட்டது.
அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ள ஆளுநர் ரவி, அதன் பின்னர், கொடைக்கானல் நகர் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களையும் பார்வையிடுகிறார். செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடைக்கானலில் இருந்து புறப்படுகிறார்
தமிழக ஆளுநர் வருகை காரணமாக சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.