பள்ளி வேன் தலைப்புற கவிழ்ந்து விபத்து... 20 குழந்தைகள் படுகாயம்..!
திண்டுக்கல் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் முள்ளிபாடி புனித வள்ளார் பள்ளி உள்ளது. இங்கு பயிலும், 40 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு மகேந்திரா வேன் ஒன்று, பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தது. பாடியோர் அருகே குறுகலான கிராம சாலையில் சென்றபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் வந்ததால், அதற்கு வழிவிடுவதற்காக, ஓட்டுனர் வேனை ஓரமாக திருப்பினார்.
அப்போது, எதிர்பாராத விதமாக வேன் தலைப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்தனர். பின்னர், காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.