பழனி | முதியவரை ஏற்ற மறுத்த இழுவை ரயில் நிர்வாகம்! இயலாத காலத்தில் தவழந்து தவழ்ந்து படி இறங்கிய முதியவர்!

பழனி முருகனுக்கு கோவிலுக்கு வந்த வயதான முதியவரை மின் இழுவை ரயில் நிர்வாகம் ஏற்ற மறுத்ததால், படிப்பாதை வழியில் தவழ்ந்து தவழ்ந்து வந்த காட்சி பக்தர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 

Palani winch train management refused to board the old man! The old man crawled down the stairs

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு கிருஷ்ணகிரியை சேர்ந்த முருகேசன் என்கிற 85 வயதான முதியவர், மகள், பேரன், பேத்தியுடன் வந்திருந்தார். பழனி மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு கீழே இறங்குவதற்காக ரோப்கார் நிலையத்தில் காத்திருந்துள்ளனர். அப்போது நேரம் முடிந்து விட்டது என்று கூறியதால், மின்இழுவைரயில் ஏற சென்றபோது ஏற்ற மறுத்ததாக கூறப்படுகிறது. அவருடன் வந்த குடும்பத்தினர் தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டாம், உடல்நலம் சரியில்லாத இல்லாத முதியவரை மட்டுமாவது மின்இழுவை ரயிலில் ஏற்றி கொள்ளுமாறு கெஞ்சி கேட்டும் ஏற்ற அனுமதி மறுத்ததாக தெரிகிறது.

இதனால் படி வழிப்பாதையில் முதியவர் மற்றும் குடும்பத்தினர் இறங்கினார். முதியவரால் தெம்பாக நடக்கமுடியாமல் சிறிது நேரத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து நடக்கமுடியாமல் அவர் தவழ்ந்தபடியே படியில் இறங்கியதை பாத்த பக்தர்களை கீழே இருந்த செக்யூரிட்டிகளுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த நபர்கள், முதியரை சிறிது நேரம் தூக்கிக்கொண்டு கீழிறங்கினர். பின்னர், அங்கிருந்த மரநாற்காலி மூலம் தூங்கி வந்து காரில் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் காண்போரை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



வயோதிகம், கர்ப்பிணிகள், உடல்நலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும் சாமி தரிசனம் செய்யும் நல்ல நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட மின்இழுவைரயில், ரோப்கார் ஆகியவை தற்போது அவர்களுக்கு பயன்படாமல், பணம் படைத்தவர்கள் மற்றும் செல்வாக்கு உள்ளவர்கள் மட்டுமே ஏறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக அர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே உடனடியாக உடல்நலம் இல்லாத வயதான பக்தரை ஏற்றாமல் அலட்சியம் செய்த திருக்கோவில் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மின்இழுவைரயில், ரோப்கார் ஆகியவற்றில் வயோதிகம், கர்ப்பிணிகள், உடல்நலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் நலத் திட்டங்கள் தாமதமானால் அது மேம்படுத்தப்படுகிறது என அர்த்தம் - துணைநிலை ஆளுநர் தமிழிசை விளக்கம்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios