பழனியில் புகழ் பெற்ற பஞ்சாமிர்த கடைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை..!

பழனியில் உள்ள சித்தநாதன், கந்தவிலாஸ் பஞ்சாமிர்த கடைகளில் 40-க்கும் மேற்பட்ட வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

palani temple...kanda vilas, sithanathan panjamirtham IT raid

பழனியில் உள்ள சித்தநாதன், கந்தவிலாஸ் பஞ்சாமிர்த கடைகளில் 40-க்கும் மேற்பட்ட வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் உள்ள. இந்த கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில், பழனி மலை அடிவாரத்தில் கடந்த பல ஆண்டுகளாக பாரம்பரியமிக்க சித்தநாதன், கந்தவிலாஸ் இந்த இரு நிறுவனங்களும் பஞ்சாமிர்த விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிறுவனங்கள் பஞ்சாமிர்தம் விற்பனை அல்லாமல் இந்த மலை அடிவாரத்தில் தங்கு விடுதிகள், ஓட்டல்கள் மற்றும் திருமண மண்டபகங்களையும் இந்த நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர். palani temple...kanda vilas, sithanathan panjamirtham IT raid

இந்த பஞ்சாமிர்த விற்பனையில் மட்டும் ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி கணக்கில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. பழனி மலை தேவஸ்தானத்தால் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்பட்டாலும், அதேபோன்று சித்தநாதன், கந்தவிலாஸ் பஞ்சாமிர்தம் கடைகளிலும் அதற்கு இணையான வர்த்தகம் நடைபெறுகிறது.

 palani temple...kanda vilas, sithanathan panjamirtham IT raid

இந்நிலையில், இன்று காலை 40-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சித்தநாதன், கந்தவிலாஸ் பஞ்சாமிர்த கடைக்குள் நுழைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையிலேயே பழனி மலையடிவாரத்தில் உள்ள புகழ்பெற்ற சித்தனாதன், கந்தவிலாஸ் கடைகளில் வருமான வரித்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இரு கடைகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது பழனியில் உள்ள மற்ற கடைக்காரர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios