திண்டுக்கல்லில் பிரபல தனியார் உணவகத்தில் மோதல்; வடமாநில தொழிலாளிக்கு கத்தி குத்து - ஒருவர் கைது
திண்டுக்கல்லில் தனியார் உணவகத்தில் சக தொழிலாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் வடமாநில தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பைபாஸ் சாலையில் தனியார் உணவகத்தில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த சங்கர் (வயது 47) என்பவரும், இதே உணவகத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சூட்டுமாஜி (30) என்பவரும், உணவக சமையல் மற்றும் சப்பளை மாஸ்டராக வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வட மாநிலத்தைச் சேர்ந்த, சூட்டுமாஜி என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சங்கரிடம் அடிக்கடி தமிழர்களைப் பற்றியும், தமிழர்கள் பழக்க வழக்கங்களை பற்றியும், கிண்டல், கேலி செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. பலமுறை இப்படி பேசக்கூடாது என சங்கர் கூறியதாக தெரிகிறது. ஆனால் அதனை பொருட்படுத்தாத சூட்டுமாஜி நேற்று இரவு பணியை முடித்துவிட்டு தூங்குவதற்கு செல்லும்போது சங்கரை வழிமறித்து, கிண்டல் கேலி செய்துள்ளார்.
சங்கர் அவரை இது மாதிரியான பேசக்கூடாது என்று கூறியுள்ளார் மீறியும் கேலி கிண்டல் செய்த வந்த சூட்டுமாஜியை அருகில் இருந்த வெங்காயம் வெட்டும் கத்தியால் சங்கர் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த சூட்டுமாஜி வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்து, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அவசர அவசரமாக டெல்லிக்கு புறப்பட்ட ஆளுநர் ரவி.. அமித்ஷாவை சந்திக்க திட்டம்.?- காரணம் என்ன.?
இச்சம்பவம் குறித்து, வத்தலகுண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, சங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் வத்தலகுண்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.