திண்டுக்கல்லில் நகைக்காக மூதாட்டி கொலை; இருவர் கைது

திண்டுக்கல் அருகே மூதாட்டியை கொலை செய்து நகையை கொள்ளையடித்த நபர்களை தேடி வந்த காவல் துறையினர் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

old lady murder case 2 persons arrested in dindigul

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாலையில் உள்ள  ரெட்டியபட்டி பகுதியைச் சேர்ந்தவர் டிவேஸ் மேரி(வயது 62). திருமணம் ஆகவில்லை. இவர்  நத்தம் சாலையில் உள்ள அவரது பூர்வீக ஓட்டு வீட்டில் தனியாக இருந்து கொண்டு வட்டி தொழில் செய்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை காலை அவர் வீட்டை விட்டு வெகு நேரம் வெளியே வராத காரணத்தினால் அக்கம் பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

வீட்டின் படுக்கை அறையில்  டிவேஸ் மேரி பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர் கழுத்தில் இருந்து அணிந்திருந்த தங்கச் செயின் மற்றும் காதில் அணிந்திருந்த தோடு உள்ளிட்டவற்றை யாரோ எடுத்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. மேலும் வீட்டின் மேற்கூரை ஓடு பிரிக்கப்பட்டிருந்தது. இது குறித்து உறவினர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா ஆய்வாளர் பாலாண்டி தலைமையிலான காவல் துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அருகில் உள்ள வீடுகளில் விசாரணை நடத்தினர் திண்டுக்கல் நத்தம் சாலையில் குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் வீட்டின் ஓடு பிரிக்கப்பட்டு கழுத்தில் அணிந்து இருந்த நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

ஓசூரில் மெட்ரோ ரயில் திட்ட பணிக்கு மத்திய அரசு அனுமதி - எம்பி செல்லகுமார் தகவல்

 இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பெயரில் டிஎஸ்பி கோகுல கிருஷ்ணன் தலைமையிலான  தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஸ்டீபன்(24)  மற்றும் முத்துராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இக்கொலை, கொள்ளை வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழர்கள் மீது பாஜக தான் உண்மையான அன்ப கொண்டுள்ளது; தமிழிசை விளக்கம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios