பழனியில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியிவின் மதுரை மண்டல தலைவர் முகமது கைசர் வீட்டில்  என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

nia officers investigation in pfi person residence in palani

திண்டுக்கல் மாவட்டம் பழனி நேதாஜி நகரை சேர்ந்தவர் முகமது கைசர்(வயது 50). பழனியில் டீக்கடை நடத்திவரும் முகமது கைசர் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவராக உள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 15ம் தேதி டீக்கடையில் இருந்த முகமது கைசரை என்.ஐ.ஏ என்றழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் பழனி நகர காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

மூன்று நாட்களாக விசாரணை நடத்திய நிலையில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த சதாம் என்பவரிடமும் விசாரணை நடத்தினர். மேலும் பழனி சண்முகநதி அருகே உள்ள தக்வா பள்ளிவாசல் மற்றும் ஈத்கா மைதானம் ஆகிய பகுதிகளுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 

nia officers investigation in pfi person residence in palani

ஆளுநர் தமிழகத்தைவிட்டு ஓடும் காலம் வெகு தொலைவில் இல்லை - ஆர்.எஸ்.பாரதி பேட்டி

டெல்லியில் இருந்து வந்துள்ள 5 பேர் கொண்ட என்.ஐ.ஏ அதிகாரிகள் குழுவினர்  ஜனவரி மாதம் விசாரணையில் பாப்புலர் ப்ர்ண்ட் ஆஃப் இந்தியா மதுரை மண்டல தலைவர் முகமது கைசர்,  கட்சியின் உறுப்பினர்கள் சதாம், ஜியாவுல்ஹக் மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த ஹபீப் ரகுமான் ஆகிய நால்வரிடம் ஜனவரி மாதம் விசாரணை நடத்தினர். 

குடிசையில் இருந்து வீசிய துர்நாற்றம்; உள்ளே சென்று பார்த்தவர்களுக்கு காத்திருந் அதிர்ச்சி

இந்நிலையில் என்ஐஏ அதிகாரிகள் பழனியில் மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் முகமது கைசர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios