திண்டுக்கல்லில் போடப்பட்ட ஒரே மாத்தில் தார் சாலை மாயமானதால் பொதுமக்கள் அதிர்ச்சி

கன்னிவாடி அருகே தேர்தலுக்கு முன்பு அவசர கதியில் போடப்பட்ட தார் சாலை ஒரே மழைக்கு அடித்துச் செல்லப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

newly constructed road damaged at summer rain in dindigul district vel

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில், ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தர்மத்துப்பட்டி ஊராட்சி ஆடலூர் செல்லும் சாலையில் கோம்பையில் சாத்தாரப்பன் கோயில் உள்ளது. இப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர். அனைவரும் விவசாயத்தை மட்டும் நம்பி வாழ்ந்து வருகின்றனர். இங்கு விளையும் பொருட்கள் தினம்தோறும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் காய்கறி சந்தைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாஷாபுரீஸ்வரர் ஆலய தேர் திருவிழா; சிவதாண்டவம் ஆடி பக்தர்கள் உற்சாகம்

இந்நிலையில கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஊராட்சி நிர்வாகத்தால் தார் சாலை அமைக்கப்பட்டது. சாலை பணி நடக்கும்  போது இப்பகுதி விவசாயிகள் சாலைகளை தரமாக அமைக்க வேண்டும் என போராட்டங்கள் நடத்தினர். ஆனால் எதையும் கண்டுகொள்ளாத ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் தரமற்ற சாலையை அமைத்துவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. 

கோடை மழைக்கே தாக்குபிடிக்காத கலைஞர் நூற்றாண்டு நூலகம்; 2 பிரிவுகள் மூடப்பட்டதால் வாசகர்கள் ஏமாற்றம்

இதனிடையே தற்போது பெய்த கன மழையில் ஒரே நாளில் சாலையில் ஒரு பகுதி முற்றிலுமாக சேதம்அடைந்தது அதேபோல் சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலமும் ஆங்காங்கே உடைந்து உள்ளது தொடர்ந்து கன மழை பெய்தால் இப்பகுதியில் அதிக தண்ணீர் வரும் அப்போது பாலமும் அடித்துச் செல்லப்படும் மக்களின் வரிப்பணத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் செய்யப்படும் தார் சாலை ஒரே மலையில் அடித்துச் செல்லப்பட்டதால் இப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் தலையிட்டு மீண்டும் சாலையை தரமாக அமைத்து தர வேண்டும் என கோரிக்கையும் வைத்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios