Palani: பழனி மலை அடிவாரத்தில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், கடைகள் இடித்து அகற்றம்; போலீஸ் குவிப்பு

பழனி மலை அடிவாரத்தில் 100க்கும் அதிகமான குடியிருப்புகள், கடைகள் இடித்து அகற்றப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

more than 100 shops and residents demolished by officers as per court order near palani murugan temple in dindigul vel

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் மேற்கு கிரிவலப் பாதையில் அண்ணா செட்டி மடம் என்ற இடத்தில் 120க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பல ஆண்டுகளாக இருந்து வந்தன. இந்த நிலையில் குடியிருப்புகளை அகற்ற கோரி திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்து வழக்கில்  குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கி குடியிருப்புகள் அனைத்தையும் அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. 

NEET UG re-exam results: கருணை மதிப்பெண் விவகாரம்; நீட் மறுத்தேர்வு  முடிவுகள் வெளியீடு

இதனை அடுத்து வருவாய்த் துறையினர் குடியிருப்பு வாசிகளுடன் கடந்த ஆறு மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி மாற்று இடம் வழங்கினர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று வருவாய்த்துறை, கோயில் நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் உதவியுடன் 10க்கும் மேற்பட்ட ஜேசிபி வானங்கள் கொண்டு வரபட்டு  கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி நடைபெற்றுவருகிறது. 

LPG Gas Cylinders Price : குட் நியூஸ்.. சமையல் எரிவாயு விலை குறைந்தது..! எவ்வளவு தெரியுமா.?

மேலும் பழனி மலை அடிவாரத்தில் படிப்பாதை அருகில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த பிரபல தனியார் பஞ்சாமிர்த கடையான சித்தநாதன் பஞ்சாமிர்த கடையும் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடித்து அகற்றப்பட்டது. குடியிருப்புகளை அகற்றும்போது குடியிருப்பு வாசிகள் தடுத்து இடையூறு செய்யலாம் என்பதால் பாதுகாப்பு பணியில் முன்னெச்சரிக்கையாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பழனி மலை அடிவாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இடித்து அகற்றும்பணி நடைபெறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios