திடீரென தரிகெட்டு ஓடிய லாரி வீட்டுக்குள் புகுந்து விபத்து; ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்

திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி கட்டுக்கோட்டையிழந்து வீட்டுக்குள் புகுந்த விபத்தில்  தூங்கிக் கொண்டிருந்த ஒருவர் பலியானார் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

lorry hit home at dindigul madurai national highway and one person killed who slept at home in dindigul vel

திண்டுக்கல் மாவட்டம் தோமையார்புரம் ஏடி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 38). இவர் கட்டிட கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவரது மகன்கள் ரித்திக், ரியோத் ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் மைசூருவில் இருந்து தேனிக்கு அரிசி லோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

லாரி திண்டுக்கல், மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தோமையார்புரம் அருகே வந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தறி கேட்டு ஓடி குடியிருப்பு பகுதியில் புகுந்தது. இதில் ஒரு வீடு இடிந்தது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜஸ்டின் கட்டிட ஈடுபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். 

உதயநிதியின் சனாதன பேச்சுக்கு வாய் திறக்காத தமிழக மடாதிபதிகள்; இதெல்லாம் நியாயமாபா? கிருஷ்ணசாமி குமுறல்

மேலும் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் தாலுகா காவல் துறையினர் உயிரிழந்த ஜஸ்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த மூன்று பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். லாரி புகுந்து விபத்து ஏற்படுத்தியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய குடிமகன்; மது அருந்த பணம் தர மறுத்ததால் ஆத்திரம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios