அப்படி போடுங்க… நகைக் கடன் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கிரிமின வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசு உத்தர்வு….
கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவுசெய்ய தமிழ்நாடு அரசு பரிந்துரைத்துள்ளதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவுசெய்ய தமிழ்நாடு அரசு பரிந்துரைத்துள்ளதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதைப் போல கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கும் குறைவான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும் தகுதியானவர்களை அடையாளம் காண நடைபெற்ற ஆய்வில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்கங்கள் ஆகியவற்றில் முறைகேடுகள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குரும்பூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ 2 கோடி மதிப்புள்ள 247 நகை பொட்டலங்களை காணவில்லை. வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு வழங்கக்கூடிய அந்தி யோஜனா திட்டத்தின் கீழ் அவர்களது பெயரில் கிலோ கணக்கில் நகைகளை அடமானம் வைத்ததாக கூறி பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது என்று அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். மேற்கு மாவட்டங்களான தருமபுரி, சேலம், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட ஊர்களில் அதிகளவில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம் பாப்பையாபுரம் சொசைட்டியில் 100, 200, முதல் 600 சவரன் வரை நகைக்கடன் பெற்றுள்ளனர். சங்க உறுப்பினர்கள் மற்றும் கடன் சங்கங்களின் அலுவலர்கள் உடந்தையால் இத்தகையை முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. அனைவரது மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.