பழனியில் ஆம்லேட் லேட்டானதால் ஹோட்டல் உரிமையாளர் மண்டை உடைப்பு

பழனியில் உணவகத்தில் ஆம்லெட் கேட்டு கடை உரிமையாளரையும், அவரது மகனையும் மூன்று பேர் கடுமையாக தாக்கியதில் மண்டை உடைந்து மருத்துவ மனையில் அனுமதி. 

hotel owner attacked by 3 persons in dindugal district

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலைய வளாகத்தில் உணவகம் நடத்தி வருபவர் சுப்பிரமணி. நேற்று வழக்கம் போல் உணவகத்தில் இருந்தபோது குடிபோதையில் வந்த மூன்று நபர்கள் குடிபோதையில் அநாகரிகமாக பேசிக்கொண்டே உணவு அருந்தி கொண்டிருந்தனர். அப்போது ஆம்லேட் கேட்டால் சீக்கிரம் தரமுடியாதா என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது கடை உரிமையாளர் ஆம்லேட் ஆர்டர் சொல்ல வில்லையே என கேட்டுள்ளார். குடிபோதையில் இருந்த மூன்று பேரும் கடையில் இருந்த பொருட்களை வீசி எரிந்தும், சுப்ரமணியை அடுப்பில் எரிந்து கொண்டிருந்த கட்டையால் தாக்கீ உள்ளனர். மேலும் சுப்ரமணியின் மகன் தினேஷையும் தாக்கியுள்ளனர். 

Crime News Today: மது போதையில் தம்பியை போட்டு தள்ளிய அண்ணன் கைது; திருவாரூரில் பரபரப்பு

அப்போது அங்கு வந்த சுப்ரமணியின் மனைவி லட்சுமி, மகன் தினேஷை காப்பாற்ற போராடும் காட்சிகளும், தாக்குதல் சம்பவமும் அருகில் இருந்த பழக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதில் தலையில் படுகாயமடைந்த சுப்ரமணி பழனி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டுள்ளார்.

அளவுக்கு அதிகமாக கடன் வாங்கிய மகன்; வாழ்க்கையை முடித்துக் கொண்ட பெற்றோர்

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அடிதடியில் ஈடுபட்ட அசோக், நவீன், சீனிவாசன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனியில் உணவகத்தில் ஆம்லேட் கேட்டு  அடிதடியில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios