நான் லஞ்சம் வாங்குவேன்.. நீங்க வேணும்னா ரெக்கார்ட் செய்து கொள்ளுங்கள்.. அடாவடி செய்யும் அரசு அதிகாரி வீடியோ.!
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். ராஜேஷ் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சித்தையன்கோட்டை பகுதியில் 9 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். அதில், இரண்டலை ஏக்கர் நிலத்தை விற்பனை செய்வதற்காக வீட்டடி மனைகளாக பிரித்துள்ளார். மனைகளை விற்பனை செய்ய திட்ட அனுமதி கோரி சித்தையன்கோட்டையில் பேரூராட்சி அலுவலராக பணிபுரியம் கோபிநாத் என்பவரை ராஜேஷ் அணுகியுள்ளார்.
திண்டுக்கல்லில் வீட்டு மனைக்கு அமைச்சரின் கையொப்பம் இல்லாமல் திட்ட அனுமதி வழங்க முடியாது என பேரூராட்சி செயல் அலுவலர் கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். ராஜேஷ் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சித்தையன்கோட்டை பகுதியில் 9 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். அதில், இரண்டலை ஏக்கர் நிலத்தை விற்பனை செய்வதற்காக வீட்டடி மனைகளாக பிரித்துள்ளார். மனைகளை விற்பனை செய்ய திட்ட அனுமதி கோரி சித்தையன்கோட்டையில் பேரூராட்சி அலுவலராக பணிபுரியம் கோபிநாத் என்பவரை ராஜேஷ் அணுகியுள்ளார்.
கோபிநாத் நில விற்பனை அனுமதி தர 2 லட்சம் ரூபாய் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும், அனமதி தராமல் ராஜேஷை அலைகழித்ததாக தெரிவிகிறது. இதனால், மனஉளைச்சல் அடைந்ந ராஜேஷ் செயல் அலுவலர் கோபிநாத்திடம் தன்னுடைய நிலையை கூறி அனுமதி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொண்டுள்ளார். கரூரில் 10 வட்டிக்கு 6 கோடி ரூபாய் கடன் வாங்கி தான் இந்த தொழிலை செய்து வருவதாகவும் நிலத்தை விற்பனை செய்ய முடியாமல் தான் தவித்து வருவதாகவும் கெஞ்சியுள்ளார்.
"
கோபிநாத்துக்கு 2 லட்சம் ரூபாய் பணம்கூட பத்து வட்டிக்கு வாங்கி தான் கொடுத்ததாகவும், தான் நிலைமை அறிந்து அந்த இடத்திற்கு அனுமதி கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலளித்த கோபிநாத் எழுதி வைத்துகொள்ளுங்கள் அல்லது ரெக்கார்ட் செய்துகூட செய்து கொள்ளுங்கள் அமைச்சரின் கையொப்பம் அல்லாமல் எதுவும் செய்ய முடியாது என கூறியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.