திண்டுக்கலில் பேக்கரிக்குள் பாய்ந்த அரசுப் பேருந்து; ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் - அதிகாரிகள் அதிரடி
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த அரசுப் பேருந்து அருகில் இருந்த இனிப்பகத்திற்குள் புகுந்த விபத்தில் ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையில் இருந்து அரசு பேருந்து ஒன்று நேற்று முன்தினம் காலை 6 மணி அளவில் புறப்பட்டது. பேருந்தை ஓட்டுநர் பழனிச்சாமி இயக்கி உள்ளார். இதனிடையே திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து தேனி நோக்கிச் சென்ற அந்த பேருந்து பேருந்து நிலையில் இருந்து வெளியில் வரும்பொழுது அருகில் இருந்த இனிப்பகத்தின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் கடையில் பணிபுரியும் பெண் ஊழியர் காயமடைந்தார்.
பேருந்தில் திடீரென பிரேக் செயல் இழந்ததால் இந்த விபத்து நடைபெற்றதாக ஓட்டுநர் தெரிவித்தார். இதனை அங்கு கூடியிருந்தவர்களும் நம்பினர். இதனிடையே விபத்து தொடர்பாக துறை ரீதியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், காலை 6.05 மணிக்கு புறப்பட்ட பேருந்து திண்டுக்கல் வரை சுமார் 210 கி.மீ எந்தவித இயந்திர கோளாறும் ஏற்படாமல் சென்றுள்ளது.
பாஜகவில் இருப்பவர்கள் குற்ற பின்னணி உள்ளவர்களா? தமிழிசைக்கு திருச்சி சூர்யா நேரடி சவால்
மீண்டும் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து தேனிக்கு பகல் 1.45 மணிக்கு புறப்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் போது, பேருந்து ஓட்டுநர் விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் வேகமாக இயக்கி, இடது புறம் திரும்புவதற்கு பதிலாக நேராக பேருந்தை இயக்கி இனிப்பகத்திற்குள் சென்று விபத்தை ஏற்படுத்தி உள்ளார்.
ஆண்டு தேர்வில் குறைவான மதிப்பெண்; பெற்றோர் கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவன் விபரீத முடிவு
எனவே, பேருந்து விபத்துக்கு ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என உறுதி செய்யப்பட்டது. மேலும் பேருந்து இதற்கு முந்தைய நாட்களில் பராமரிப்பு குறைபாடு ஏதுமின்றி முழுமையாக இயக்கப்பட்டுள்ளது. பேருந்தில் எந்தவித இயந்திர கோளாறும் இல்லை. என உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து விபத்திற்கு காரணமான ஓட்டுநர் பழனிச்சாமி மீது துறை ரீதியான நடவடிக்கையாக அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.