கண்ணிமைக்கும் நேரத்தில் ஹோட்டலுக்குள் புகுந்த அரசு பேருந்து! 2 பேர் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி உயிரிழப்பு.!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு நேற்று மாலை அரசு பேருந்து பயணிகளுடன் புறப்பட்டது. பேருந்து மதுரையை சேர்ந்த ஓட்டுநர் சசிகுமார் ஓட்டி வந்தார். 

government bus accident... two people killed

நத்தம் அருகே ஹோட்டலுக்குள் அரசு பேருந்து புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு நேற்று மாலை அரசு பேருந்து பயணிகளுடன் புறப்பட்டது. பேருந்து மதுரையை சேர்ந்த ஓட்டுநர் சசிகுமார் ஓட்டி வந்தார். பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் நத்தம் கோவில்பட்டி புளிக்கடை பேருந்து நிறுத்தத்தின் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடி ஹோட்டலுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. 

இதையும் படிங்க;- கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள்.. திருமணமான 2-வது நாளில் கணவன் கண்ணெதிரே உயிரிழந்த புதுமணப்பெண்..!

government bus accident... two people killed

அந்த பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்தை பார்ப்பதற்காக பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நின்றுக்கொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாக பேருந்து மோதியதில் தேவராஜ்(59), பாண்டி(50) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளதத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயங்களுடன் நந்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

government bus accident... two people killed

இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க;-  முதல்வர் கான்வாய் முன்பு பைக்கில் ஸ்டண்ட் செய்த இளைஞர்.. மடக்கி பிடித்து சரியான ஆப்பு வைத்த போலீஸ்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios