வறுமை காரணமாக பழனியில் ரயில்முன் பாய்ந்து திமுக பிரமுகர் தற்கொலை
பழனியில் குடும்ப வறுமை காரணமாக திமுக பிரமுகர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பழனி கோட்டைமேட்டுத் தெருவில் வசித்து வந்தவர் ராஜா முகமது (வயது 60). திருமணமாகி மனைவி, மகளுடன் வசித்து வந்தார். கடந்த சில வருடங்களாக ராஜாமுகமதுவின் மனைவி மற்றும் மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
மேலும் ராஜா முகமது பழனியில் உள்ள பள்ளிவாசலில் தற்காலிக பணியாளராக இருந்த நிலையில் அவரது வேலையும் பறிபோனதாகக் கூறப்படுகிறது. இதனால் குடும்பம் வறுமையில் இருந்து வந்ததுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீவிர தொண்டராகவும், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளராகவும் ராஜமுகமது இருந்துள்ளார்.
ஒகேனகல்லுக்கு சுற்றுலா சென்ற கார்மெண்ட்ஸ் தொழிலாளி காவிரி ஆற்றில் மூழ்கி பலி
குடும்பத்தின் வறுமை காரணமாக தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த ராஜா முகமது கோதைமங்கலம் ரயில்வே தண்டவாளத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தகவல் அறிந்த ரயில்வே காவல் துறையினர் ராஜா முகமதின் உடலை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
உடன் பிறந்த தம்பியுடன் கள்ளத்தொடர்பு; மனைவியை வெட்டி கொன்ற கணவன் காவல் நிலையத்தில் சரண்
தற்கொலை குறித்து ராஜாமுகமது எழுதிய கடிதத்தை கைப்பற்றிய காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப வறுமை காரணமாக திமுக பிரதிநிதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.