Asianet News TamilAsianet News Tamil

திண்டுக்கல் மக்களவை தொகுதி.. பாமக மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்.. என்ன காரணம்?

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு திண்டுக்கல், ஆரணி, தருமபுரி உள்ளிட்ட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

Dindigul north district PMK secretary Jothi Muthu removed.. Ramadoss Action tvk
Author
First Published Mar 28, 2024, 8:08 AM IST

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பாமக போட்டியிடும் நிலையில் அக்கட்சியை சேர்ந்த வடக்கு மாவட்ட செயலாளர் ஜோதிமுத்து அப்பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு திண்டுக்கல், ஆரணி, தருமபுரி உள்ளிட்ட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், திண்டுக்கல் தொகுதியில் கவிஞரும், பாமக மாநில பொருளாளருமான திலகபாமா போட்டியிடுகிறார். இந்நிலையில், திடீரென திண்டுக்கல் வடக்கு மாவட்ட பாமக மாவட்ட செயலாளர் ஜோதி முத்து அப்பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க: Erode GaneshaMoorthy: திமுக டூ மதிமுக.. யார் இந்த கணேசமூர்த்தி? வைகோவுக்காக இவ்வளவு செய்து இருக்காரா?

இதுதொடர்பாக பாமக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: திண்டுக்கல் வடக்கு மாவட்ட பட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் ஜோதி முத்து இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய திண்டுக்கல் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய செயலாளராக வைரமுத்து நியமிக்கப்படுகிறார். 

இதையும் படிங்க:  வசமாக சிக்கிய அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார்! 150 மூட்டை புடவைகள் பறிமுதல்!இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜோதி முத்துவின் பதவி பறிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. 

Follow Us:
Download App:
  • android
  • ios