BREAKING அடுத்தடுத்து அதிர்ச்சி... மேலும் ஒரு அரசுப்பள்ளி ஆசிரியைக்கு கொரோனா... பள்ளி தற்காலிகமாக மூடல்...!
திண்டுக்கல் அருகே அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தற்காலிகமாக பள்ளிக்கூடம் மூடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அருகே அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தற்காலிகமாக பள்ளிக்கூடம் மூடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை, முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் வாரம் ஒருமுறை பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா அறிகுறிகள் குறித்து பரிசோதனை நடத்தவும் சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே ஒரு ஆசிரியை, 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. தற்போது திண்டுக்கல் மாவட்டத்தின் பழனி அருகே உள்ள சின்ன காந்திபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதனையடுத்து, 10ம் வகுப்பு ஆசிரியைக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட காரணத்தால் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் அப்பள்ளியில் பணிபுரியும் 9 ஆசிரியர்கள் மற்றும் 20 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்தடுத்து பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா தொற்றுக்கு ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.