காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக  இருந்தபோது மகேஸ்வரி மீது கொரோனா காலகட்டத்தில் லைசால் கொள்முதல் செய்ததில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தது. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. 

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக இருந்தபோது மகேஸ்வரி மீது கொரோனா காலகட்டத்தில் லைசால் கொள்முதல் செய்ததில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தது. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. 

இந்த புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் உள்ள மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி பதவியேற்று இரண்டு மாதங்கள் கூட இன்னும் நிறைவடையாத நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த அதிரடி சோதனை நடத்தி வருவது பரரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணிபுரிந்த துப்புரவு ஆய்வாளர்கள் 3 பேரின் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது.