சாலை தடுப்புச் சுவற்றில் மோதி தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவர்கள்; ஒருவர் பலி, ஒருவர் கவலைக்கிடம்
வத்தலகுண்டு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் தடுப்புச்சுவற்றில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்த ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே, கோம்பைப்பட்டியைச் சேர்ந்த, செல்வம் மகன் ஆனந்த் (வயது 21). தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வரும் இவரும் ஜி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த இவரது உறவினர் அழகுமணி மகன் பிரவீன்குமார் (17). நேற்று இரவு, 9.00 மணி அளவில் இருசக்கர வாகனத்தில், வத்தலக்குண்டில் இருந்து, கோம்பைபட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
ஆட்சியரின் காரை துரத்தி சென்று மடக்கி பிடித்த எம்எல்ஏவால் புதுவையில் பரபரப்பு
அப்போது வத்தலகுண்டு அடுத்த, வெங்கடாஸ்திரிகோட்டை என்ற இடத்தில், பாலத்தின் அருகே சாலையின் தடுப்பு சுவற்றில் மோதி பலத்த காயமடைந்தனர். அவர்களை 108 ஆம்புலன்சில், வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்களை மருத்துவர்கள் பரிசோதித்த போது, இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற ஆனந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த, பிரவீன்குமார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வத்தலக்குண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, ஆனந்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இருசக்கர வாகன விபத்தில், கல்லூரி மாணவர் பலியான சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.