இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்... கணவன் கண் முன் மனைவி துடிதுடித்து உயிரிழப்பு..!
திண்டுக்கல் அருகே இருசக்கரம் வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கணவன் கண் முன் தூக்கிவீசப்பட்ட மனைவி துடிதுடித்து உயிரிழந்தார்.
திண்டுக்கல் அருகே இருசக்கரம் வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கணவன் கண் முன் தூக்கிவீசப்பட்ட மனைவி துடிதுடித்து உயிரிழந்தார்.
திண்டுக்கல் அருகே உள்ள சீலப்பாடி அழகிரி கவுண்டனூரைச் சேர்ந்தவர் அக்பர். இவர் பேக்கரி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பைசா பேகம் (47). இவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தனது கணவர் அக்பருடன் இன்று காலை இருசக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, மீனாட்சி நாயக்கன்பட்டியில் உள்ள ஒரு வேகத்தடையில் இருசக்கர வாகனம் ஏறி இறங்கியது. அப்போது, பின்னால் வந்த சரக்கு வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் அக்பர் சாலையோரம் தவறி விழுந்தார். தூக்கிவீசப்பட்ட மனைவி லாரியின் சக்கரத்தில் சிக்கிய பைசா பேகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்ததும் அக்பர் கதறி அழுதார்.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பைசா பேகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தலைமறைவாக இருந்து வருகிறார். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.