நிலக்கோட்டையில் மர்ம காய்ச்சல் காரணமாக 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் மர்ம காய்ச்சல் காரணமாக 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பூ விவசாயம் தமிழ்நாட்டில் மிக அதிகமாக நடைபெறும் பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் நிலக்கோட்டை பேரூராட்சி அருகில் கொங்கர் குளம் நீரோடை செல்கிறது. இந்த நீரோடை 12 கண் பாலம் வழியாக கொங்கர் குளம் கண்மாய்க்கு சென்று விவசாய நிலங்களுக்கு பயன் பட்டு வருகிறது. ஆனால் கடந்த 2 வருடங்களாக நீரோடையில் கொட்டப்படும் குப்பை மற்றும் கோழிக் கழிவுகளால் நீரோடையில் செல்லும் தண்ணீர் தடைபட்டு கண்மாய்க்கு செல்லாமல் ஓடையிலேயே தேங்கி வருகிறது.
இதனால் நிலக்கோட்டை அருகே உள்ள கிராமப் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பேரூராட்சி அலுவலகத்திற்கு அருகே செல்லும் இந்த நீரோடையில் குப்பைக் கழிவுகள் மலைபோல் குவிந்து வருவதால் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்று நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சலுடன் 5 பேர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகாவில் உள்ள தமிழர்களை தமிழகத்திற்கே அழைத்துக்கொள்ளுங்கள் - வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை
இந்த 5 பேரில் 2 பேர் டெங்கு நோய் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அதிர்ச்சியுற்ற நிலக்கோட்டை பொதுமக்கள் சுகாதார சீர்கேட்டை கண்டித்து நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். புகார் மனுவில் நிலக்கோட்டை பகுதியில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கோரியும், நீரோடையில் ஆக்கிரமித்துள்ள குப்பைகள், கழிவுகளை அப்புறப்படுத்தக் கோரியும் புகார் கொடுத்துள்ளனர். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 22 அடி உயர பிரமாண்ட விநாயகர் சிலை பலத்த பாதுகாப்புடன் கரைப்பு