அசுர வேகத்தில் வந்த கார் தடுப்பு சுவரில் மோதி விபத்து; 2 பேர் பலி, 2 பேர் படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் அசுர வேகத்தில் வந்த கார் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.

2 persons killed 2 persons highly injured road accident in dindigul district

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி பரமேஸ்வரி, மகன் பிரபு மற்றும் உறவினரான மணிகண்டன் ஆகிய நான்கு பேரும் கோபிசெட்டிபாளையம் பகுதியில் இருந்து மதுரை நோக்கி நவீன சொகுசு காரில் திண்டுக்கல் மதுரை  நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தனர். 

அப்போது, காந்தி கிராமத்தை அடுத்த அம்பாத்துறை ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு அருகில் அதிவேகமாக வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறி கெட்டு ஓடியது. இதனைத் தொடர்ந்து கார் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி  அப்பளம் போல நொறுங்கியது. இதில்  பரமேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இன்னும் பல ரயில் விபத்துகளுக்கு வாய்ப்பு - எச்.ராஜா எச்சரிக்கை

பாலசுப்ரமணி மருத்துவமயில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கார் ஓட்டிய பிரபுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின் சீட்டில் அமர்ந்திருந்த மணிகண்டனுக்கும்  பலத்த காயம் ஏற்பட்டது. பிரபு மற்றும் மணிகண்டன் இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காரின் முன் பக்கத்தில்  சீட்டின் பொருத்தப்பட்டிருந்த ஏர் பலூன்  வெடித்துள்ளது. காரின் சீட்டில் ஏர் பலூன் இருந்தும் வெடித்து  இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலை கண்டித்த பெற்றோர்; மனமுடைந்த சகோதரிகள் கிணற்றில் குதித்து தற்கொலை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios