திண்டுக்கலில் வேன், கார், பைக் அடுத்தடுத்து மோதி விபத்து; 2 பேர் படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மணியக்காரன் பட்டி பிரிவில் கார், வேன், இருசக்கர வாகனம் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரும், காரில் பயணம் செய்த ஒருவரும் படுகாயம் அடைந்தனர். 

2 persons highly injured road accident at dindigul district

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் மற்றும் மகேந்திரா வேன் நிலக்கோட்டையில் இருந்து கோம்பைப்பட்டி சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த கோம்பை பட்டியைச் சேர்ந்த பூமி நாயக்கர் மகன் முருகன் (வயது 38) படுகாயம் அடைந்தார். 

மேலும் காரில் பயணம் பெண் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். இருவரையும் நிலக்கோட்டை தீயணைப்பு துறையினர் நிலை அதிகாரி விவேகானந்தர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். 

கடலூர் மாவட்டத்தில் தனியார் பேருந்து மோதி 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி; 28 பேர் காயம்

மேலும்  காயம் அடைந்த பெண் 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த தொடர் விபத்து குறித்து நிலக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் குரு வெங்கட்ராஜ் தலைமையில் அருண் பிரசாத், நீலமேகம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இதனால்  மதுரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios