ஷாக்கிங் நியூஸ்! கள்ளத்தொடர்பால் பிறந்த 2 பெண் சிசுக்கள் குப்பைத் தொட்டியில் வீச்சு? கடித்து குதறிய நாய்கள்

 தூய்மை பணியாளர்கள் குப்பைத் தொட்டியில் இருந்து குப்பையை அல்ல சென்றபோது  குப்பை தொட்டியில் குறைமாத சிசுக்கள் 2 இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 

2 baby found dead in garbage dump in Dindigul

திண்டுக்கல்லில் குப்பைத்தொட்டியில் இருந்து இறந்த நிலையில் 2 சிசுக்களின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி, புனித பிலோமினாள் பள்ளி அருகே மாநகராட்சி சார்பாக பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை தூய்மை பணியாளர்கள் குப்பைத் தொட்டியில் இருந்து குப்பையை அல்ல சென்றபோது  குப்பை தொட்டியில் குறைமாத சிசுக்கள் 2 இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 

இதையும் படிங்க;- எங்க மாமனாரும், மாமியாரும் வீட்ல இல்ல! வந்தா கணவனின் கதையை முடிச்சிடலாம்! நாடகமாடிய மனைவி! சிக்கியது எப்படி?

2 baby found dead in garbage dump in Dindigul

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 2 பெண் சிசு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குப்பைத் தொட்டி அருகே கிடந்ததால் சிசுக்களை நாய்கள் கடித்து குதறியுள்ளன. இதில் ஒரு சிசுவின் தலையை காணவில்லை.

இதையும் படிங்க;-  பாட்டி.. அம்மா கிட்ட சொன்னாலும் கண்டுக்கல.. என்ன அந்த மாமா கண்ட இடத்தில் கை வைத்து இப்படிலாம் பண்ணாரு.!

2 baby found dead in garbage dump in Dindigul

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசுக்களை யார் குப்பைத் தொட்டியில் வீசி சென்றனர்? இரண்டும் ஒரே தாய்க்கு பிறந்ததா? மற்றும் ஏதேனும் கள்ளத்தொடர்பால் பிறந்ததா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் சிசிடிவி கேமரா எதுவும் உள்ளதா? அதில் சிசுவை வீசிச் சென்றவர்கள் உருவம் பதிவாகியுள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios