மாணவர்கள் உயிருடன் விளையாடும் அரசு.. சென்னையில் இருந்து கொடைக்கானல் சென்ற 10-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா..!
சென்னையிலிருந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக கொடைக்கானல் சென்ற மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலிருந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக கொடைக்கானல் சென்ற மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், பேருந்து வசதிகள் செய்து தரப்படும் என்றும் அரசு கூறி உள்ளது. ஆனாலும், தேர்வினை தள்ளிவைக்க வேண்டும் ஆசிரியர்கள் சங்கத்தினர் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. ஆனால், தேர்வை நடத்திய தீர வேண்டும் என்று அரசு தீவிரமாக உள்ளது. இன்று 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்று இல்லாத மாவட்டமான திண்டுக்கல்லில் 10-ம் வகுப்பு மாணவிக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு தேர்வு எழுத வந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக மாணவி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவிக்கு தொற்று உறுதியானதை அடுத்து வாகன ஓட்டுநர், மாணவியின் தாய் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 147 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு 123 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.