கிறிஸ்தவ தேவாலயத்தில் அண்ணாமலைக்கு கடும் எதிர்ப்பு; இது புனிதமான இடம் என்று கூறி இளைஞர்கள் வாக்குவாதம்
தருமபுரியில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கிறிஸ்தவ தேவாலயத்தில் அன்னையின் உருவ சிலைக்கு மாலை அணிவிக்க அப்பகுதி இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் சுற்றுப்பயணம் கடந்த 7, 8ம் தேதி என இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை 6.30 மணியளவில் பொம்மிடி அருகே உள்ள பி, பள்ளிப்பட்டி புகழ்பெற்ற கிறுஸ்தவபுனித லூர்து அன்னை மலைக்கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய முயன்றார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 20க்கும் மேற்பட்டோர் சூழ்ந்து கொண்டு அன்னையின் திரு உருவம் பொறித்த சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மணிப்பூர் மாநிலத்தில் கிறிஸ்துவ சிறுபான்மையினர் கொத்துக் கொத்தாக கொலை செய்யப்பட்ட போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? பாஜக நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஏன்? அண்ணாமலையிடம் அந்த இளைஞர்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
அவர்களுக்கு பதில் அளித்த அண்ணாமலை, மணிப்பூர் கலவரத்தில் பழங்குடியினரான இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாரதிய ஜனதா கட்சி அரசு தக்க நடவடிக்கை எடுத்ததாக விளக்கம் அளித்தார். ஆனாலும், அதனை ஏற்றுக் கொள்ளாமல் அண்ணாமலைக்கு எதிராக அன்னையின் உருவத்திற்கு மாலை அணிவிக்க கூடாது என கோஷம் எழுப்பினர். அவர்கள் எதிர்ப்பையும் மீறி அண்ணாமலை அன்னையை உருவ சிலைக்கு மாலை அணிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூரில் போக்குவரத்து தொழிலாளர்களிடையே தள்ளு முள்ளு; பேருந்தை இயக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு