மூளைச்சாவு அடைந்த ஆசிரியரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய மனைவி
சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த தனியார் பள்ளி ஆசிரியரின் அனைத்து உடல் உறுப்புகளையும் தானம் வழங்கிய மனைவி.
தருமபுரி அருகே மணியம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் ஸ்ரீ நிகேஷ் (14 ), கவின் நிலவன் (8) என இரண்டு மகன்களும் உள்ளனர். செந்தில்குமார் கடந்த புதன்கிழமை பள்ளி முடித்துவிட்டு மாலை வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் கடத்தூர் ஒடசல்பட்டி சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகன மோதி படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்து வந்த உறவினர்கள் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கும் சிகிச்சை பலன் அளிக்காமல் மீண்டும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற நேற்று அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடனை கட்டாததால் வீட்டு பொருட்களோடு சேர்த்து வீதியில் வீசப்பட்ட முதியவர்; பொதுமக்கள் அதிச்சி
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளை செயல் இழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் மருத்துவர்கள் செந்தில்குமாரின் மனைவி விஜயலட்சுமி மற்றும் அவர் உறவினர்களிடம் உடல் உறுப்புகள் தானம் குறித்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து செந்தில்குமார் மனைவி விஜயலட்சுமி முன் வந்து தனது கணவரின் உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்வதாகவும் இதனால் என் கணவரிடம் தானமாக பெற்று உயிருடன் வாழும் அவர்கள் என் கணவர் மூலமாகம வாழ்வதாக எண்ணுகிறேன் என சம்மதம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவ குழுவினர் நேற்று இரவு 9 மணி முதல் இன்று விடியற்காலை இரண்டு மணி வரை விடிய விடிய செந்தில்குமாரின் உடலில் நல்ல நிலையில் உள்ள இருதயம், நுரையீரல், கல்லீரல், கணையம், கண் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து சென்னை, வேலூர், சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
30 இடங்களில் வெட்டு; தலை துண்டித்து மனைவியை கொடூரமாக கொன்ற கணவர் - திருப்பூரில் பரபரப்பு
கண் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெற்றுக் கொள்ளப்பட்டது. இதுகுறித்து மனைவி விஜயலட்சுமி கூறும் போது என் கணவர் தான் எங்களுடைய வாழ்க்கை என்று இருந்தோம். அவர் இல்லாத இந்த வாழ்க்கையை நானும், என் இரண்டு பிள்ளைகளும் எப்படி வாழ்வது என்று தெரியாமல் தவித்து வருகிறோம். இதனால் தமிழக அரசு கருணை அடிப்படையில் அரசு வேலை ஒன்று வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.