காவல்துறை அதிகாரி டூ மருத்துவர் கனவு.. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற போலீஸ் - குவியும் பாராட்டுக்கள் !!
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காவல்துறையில் பணியாற்றியபடியே நீட் தேர்வில் வென்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார்.இதற்கு அந்த இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தர்மபுரி, பென்னாகரம் அடுத்த முதுகம்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி இன்பவள்ளி. இவர்களுக்கு சிவராஜ் (23) உள்பட 3 மகன், ஒரு மகள் உள்ளனர். 3வது மகனான சிவராஜ் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து கடந்த 2016 ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதி 915 மதிப்பெண் பெற்றார்.
மருத்துவம் படிக்க வேண்டும் என்பது இவரது ஆசையாக இருந்தது என்று கூறப்படுகிறது. கட்ஆப் மார்க் குறைவாக இருந்ததால் இடம் கிடைக்கவில்லை. இதனால் பி.எஸ்.சி படித்து முடித்த அவர் 2020 ஆம் ஆண்டு 2 ஆம் நிலை காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று காவலராக பணியில் சேர்ந்தார். தற்போது சென்னை ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் காவலராக பணியாற்றி வந்தார்.
காவலராக பணியாற்றினாலும், டாக்டராக வேண்டும் என்ற ஆசை அவருக்கு நீண்ட காலமாக இருந்து வந்தது. நீட் தேர்வு எழுத காவலராக பணியாற்றி கொண்டே படித்து வந்தார். கடந்த ஆண்டு எழுதிய நீட் தேர்வில் 263 மதிப்பெண் எடுத்தார். ஆனால் அரசு கல்லூரியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தாண்டும் நீட் தேர்வு எழுதிய சிவராஜ், 400 மதிப்பெண்கள் பெற்றார்.
பிறகு இதனையடுத்து அரசு பள்ளியில் படித்தவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் சீட் அவருக்கு கிடைத்தது. கவுன்சிலிங்கில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. சிவராஜின் தம்பி நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் 3ம்ஆண்டு படித்து வருகிறார்.
Bank Holiday In August 2023 : ஆகஸ்ட் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... முழு விபரம் இதோ !!
ஏழ்மை காரணமாக நான் மேற்கொண்டு படிக்க முடியால் தேர்வு எழுதி காவலர் பணியில் சேர்ந்தேன். இருப்பினும் எனக்கு டாக்டராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதனால் நான் நீட் தேர்வுக்கு கடுமையாக படித்து வந்தேன்.வேலை பளுவிற்கும் இடையே படித்து வந்தேன். 400 மதிப்பெண் எடுத்ததால் கிருஷ்ணகிரி அரசு கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
எனது கனவு நனவாக உள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார் சிவராஜ். காவல்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி தற்போது பார்த்து வரும் பணியில் இருந்து விலகி பின்னர் மருத்துவக் கல்லூரியில் சேர இருப்பதாக சிவராஜ் தெரிவித்தார். இவருக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
10ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்.. மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் வேலை - முழு விபரம் !!