Crime News : கடனை கட்டுவதில் தாமதம்: அடாவடி செய்த நிதி நிறுவன ஊழியர்கள் முன் கூலி தொழிலாளி தற்கொலை
தருமபுரியில் தனியார் நிதி நிறுவன ஊழியர்களின் நெருக்கடியால் தூக்கில் தொங்கிய கூலி தொழிலாளி. வேடிக்கை பார்த்த நிதி நிறுவன ஊழியர்களிடம் காவல்துறை விசாரணை.
தருமபுரி மாவட்டம் நரசியர்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயவேல். கூலித்தொழிலாளியான இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், 15 வயது மகனும், 13 வயதுடைய மகளும் உள்ளனர். ஜெயவேல் தருமபுரியில் உள்ள ஒரு தனியார் ஸ்கேன் சென்டரில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள் வீட்டு வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் ஜெயவேல் குடும்ப சூழ்நிலை காரணமாக தருமபுரியில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 2021ம் ஆண்டு 80 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். மாதம் 4870 ரூபாய் வீதம் 24 மாத காலத்தில் தவணையாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜெயவேல் 20 மாதங்கள் கடனை திருப்பி செலுத்தியுள்ளார். இந்நிலையில் மீதம் 4 மாத கடனை திருப்பி செலுத்தாததால் கடந்த 3 மாதமாக மீதமுள்ள தவணை தொகை கட்ட வலியுறுத்தி வந்த நிலையில் ஊழியர்கள் ஜெயவேலின் வீட்டிற்கு இன்று வந்து நான்கு மாத தவனை தொகையை வட்டியுடன் சேர்த்து 28 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். அதனை இன்றே செலுத்த வேண்டும் என ஜெயவேலின் வீட்டிற்கு 2 பெண்கள் உட்பட 5 பேர் காலை முதலே கடும் வார்த்தைகளால் பேசி நெருக்கடியை கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் கடனை நாளை திருப்பி கொடுத்து விடுகிறேன் என ஜெயவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் கூறியும் கேட்காமல் தனியார் நிறுவன ஊழியர்கள் இன்றே மீதமுள்ள பணத்தை கட்டியே தீர வேண்டும் என நெருக்கடியை கொடுத்துள்ளனர். அதனால் மனஉலைச்சலுக்கு ஆளான ஜெயவேல் திடீரென வீட்டுக்குள் சென்று வீட்டில் இருந்த துணியால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பணம் இல்லாத ஒரே காரணம்; டிராக்டர் ஓட்டும் பட்டதாரி பெண் - படிப்பை தொடர முடியாத அவலம்
இதனை அருகே இருந்தவர்கள் பார்த்து கூச்சலிட்டதால் அருகே இருந்தவர்களின் உதவியுடன் மின்விசிறியில் தொங்கிய ஜெயவேலுவை கீழே இறக்கி உள்ளனர். ஆனால் அதற்குள் ஜெயவேல் உயிரிழந்துவிட்டார். உடனடியாக அருகே இருந்தவர்கள் அங்கிருந்த நிதி நிருவன ஊழியர்களை மடக்கிப் பிடித்து நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காலாவதியான மாத்திரையை சாப்பிட்ட மாணவி மயக்கம்; தாராபுரத்தில் பரபரப்பு
மேலும் 2 பெண்கள் உட்பட 4 நிதி நிருவன ஊழியர்களை காவல் துறையினரிடம் ஜெயவேலுவின் உறவினர்கள் ஒப்படைத்தனர். அதனையடுத்து நிதி நிறுவன ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதோடு தப்பி ஓடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் தருமபுரி நகர பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.