நண்பர்கள் ஏமாற்றியதால் விரக்தி; நைட்ரஸ் ஆக்சைடை பயன்படுத்தி தாய், மகன் தற்கொலை
தர்மபுரி மாவட்டத்தில் நண்பர்களால் ஏமாற்றப்பட்ட நபர் தனது தாயுடன் சேர்ந்து நைட்ரஸ் ஆக்சைடு வாயுவை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் ஒட்டப்பட்டி அருகே உள்ள பழைய குவாட்டர்ஸ் பகுதியில் வாடகை வீட்டில் புலிகரையை சேர்ந்த பழனிவேல் ஓய்வு பெற்ற ஆசிரியர் அவருடைய மனைவி சாந்தி(50) மற்றும் இவருடைய மகன் விஜய் ஆனந்த்(30) ஆகியோர் வசித்து வருகின்றனர். விஜய் ஆனந்த் பொறியியல் பட்டதாரியாவார்.
இந்நிலையில் நேற்று சாந்தியின் கணவர் பழனிவேல் உறவினர்களுடைய சுப நிகழ்ச்சிக்காக பாலக்கோடு அருகே சென்றுவிட்டு மீண்டும் இரவு சுமார் 9 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது வீடு உள் பக்கமாக பூட்டி இருந்ததுள்ளது. வீட்டில் கதவின் உள்ளே நைட்ரஸ் ஆக்சைடு கேஸ் வீட்டில் பரவி உள்ளது. கதவை திறக்க வேண்டாம் காவல் துறைக்கு தகவல் தெரிவியுங்கள் என பேப்பரில் எழுதி ஒட்டி உள்ளனர்.
கடலூரில் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி உயிரிழப்பு; உறவினர்கள் மறியலால் பதற்றம்
இதனால் அக்கம் பக்கத்தினரை அழைத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது தாய், மகன் இருவரும் முகத்தில் பிளாஸ்டிக் கவர்களை கட்டிக்கொண்டு அருகில் நைட்ரஸ் ஆக்சைடு சிலிண்டர் வாயுவை டியூப் மூலம் பிளாஸ்டிக் கவருக்குள் செலுத்தி சுவாசித்தவாரே சடலமாக இறந்து கிடந்துள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட விஜய் ஆனந்த் பள்ளிபாளையம் பகுதியில் கல்லூரி நண்பர் கார்த்திக் மற்றும் அருண் ஆகியோருடன் கூட்டாக நூல் மில் நடத்தி வந்ததாகவும், இதில் சுமார் ரூ.25 லட்சம் வரை பணம் வாங்கிய நண்பர்கள் ஏமாற்றி உள்ளதாகவும், அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாகவும் அதற்கான ஆதாரங்கள் தன்னுடைய செல்போனில் பதிவு செய்துள்ளதாகவும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் பட்டப்பகலில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த முதியவர் படுகொலை - காவல்துறை விசாரணை
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பழனிவேல் அதியமான் கோட்டை காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடிதம் மற்றும் செல்போன் ஆதாரங்களை வைத்து தற்கொலைக்கு தூண்டியதாக கார்த்திக் மற்றும் அருண் ஆகிய இருவரையும் அதியமான் கோட்டை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
தற்கொலை செய்து கொள்ள தேவையான நைட்ரஸ் ஆக்சிஜன் சிலிண்டரை தர்மபுரியில் வாங்கியுள்ளதாகவும், மற்றும் கணைக்டர் மாஸ்க் உள்ளிட்டவற்றை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.