சொத்து தகராறு காரணமாக பெற்ற மகனை ஓட ஓட வெட்டிய தாய், தந்தை கைது

தருமபுரி மாவட்டத்தில் சொத்து தகராறு காரணமாக பெற்ற மகனை தாய், தந்தையே ஓட ஓட வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

man and woman arrested who try to kill his own son in dharmapuri

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மூங்கில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 40) ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் யாஷ்மின் (35) என்ற பெண்ணை காதலித்து பெற்றோர்கள் எதிர்ப்பையும் மீறி கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தையும், ஒன்றரை வயதில் பெண் குழந்தையும் உள்ளது. மதம் மாறி திருமணம் செய்ததால் தொடர் பிரச்சினை நீடித்து வந்துள்ளது. மகனுக்கும், பெற்றோர்களுக்குமே சொத்து தொடர்பாக தகராறும் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று தனது வீட்டருகே இருந்த பிரகாஷை அவரது தாய், தந்தை இருவருமே சேர்ந்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத பிரகாஷ் உயிரை காப்பாற்றி கொள்ள அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றிருக்கிறார். விடாமல் விரட்டி துரத்திய பிரகாஷின் தந்தை மீண்டும் அரிவாளால் வெட்ட முயன்று தடுமாறி கீழே விழுந்துள்ளார். 

தமிழக நிதியமைச்சருக்கு டஃப் கொடுக்கும் மேயர் பிரியா; பள்ளி மாணவர்களுக்கு சிறு தீனி

காயம்பட்ட பிரகாஷ் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தாய், தந்தை மீது நடவடிக்கை  எடுக்க கோரி ஆட்சியரிடம் புகார் கொடுக்க வந்திருப்பதாக தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

man and woman arrested who try to kill his own son in dharmapuri

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த காவல் துறையினர் ஆம்புலன்சை  தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். புகார் தொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுங்கள் எனக்கூறி பிரகாஷை மீண்டும் மருத்துவமனைக்கே அனுப்பி வைத்தனர்.

புதுச்சேரி உள்துறை அமைச்சரின் உறவினர் படுகொலை; 7 பேர் நீதிமன்றத்தில் சரண்

இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பிரகாஷின் பெற்றோரான கோவிந்தம்மாள் மற்றும் குமரவேல் ஆகிய இருவரையும் பாலக்கோடு காவல் துறையினர் கைது செய்தனர். மதம் மாறி திருமணம் செய்ததால் சொத்து தகாரறு காரணமாக பெற்ற மகனயே கொல்ல முயன் பெற்றோரால் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios