முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்ற வட்டாட்சியர் திடீர் மரணம்
தருமபுரியில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியின் இறகு பந்து போட்டியில் பங்கேற்றிருந்த வட்டாட்சியர் அதியமான் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வருகின்றன. இதில், அரசு பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் இலங்கை தமிழர்கள் முகாம்களுக்கான வட்டாட்சியர் அதியமான் (வயது 54) பங்கேற்றிருந்தார்.
நேற்று நடைபெற்ற இறகு பந்து போட்டியில் வட்டாட்சியர் அதியமான் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தார். விளையாட்டின் இடையே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு இருந்த மருத்துவ குழுவினர் உடனடியாக வட்டாட்சியருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திமுக அமைச்சர்கள் சைகோபோல பேசுகின்றனர் - பிரேமலதா காட்டம்
அதியமான் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இவரது மனைவி தங்கம்மாள் (50) அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 13 வயதில் மகளும், 11 வயதில் மகனும் உள்ளனர். உயிரிழந்த அதியமான அப்பகுதியில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் அரசு போட்டித் தேர்வுகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி பலரும் அரசு பணியில் சேர்வதற்கு உறுதுணையாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதியமானின் உயிரிழப்பு அப்பகுதியில் உள்ள அரசு பணியாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.