Asianet News TamilAsianet News Tamil

தருமபுரி மக்களை பார்த்தா எப்படி இருக்கு.. பாமகவை விமர்சித்த பதிவை நீக்கிய திமுக எம்.பி செந்தில்குமார்!

தமிழக பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக இடம் பெற்றுள்ளது. இந்த கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் நேற்று வேட்பாளர் பட்டியல் வெளியானது. 

dharmapuri mp senthilkumar criticize pmk  tvk
Author
First Published Mar 23, 2024, 10:56 AM IST

தருமபுரி மக்களவை தொகுதி வேட்பாளர் அரசாங்கம் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சவுமியா அன்புமணி அறிவிக்கப்பட்டதையடுத்து, திமுக எம்.பி செந்தில்குமார் விமர்சித்து போட்ட பதிவை நீக்கியுள்ளார்.

தமிழக பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக இடம் பெற்றுள்ளது. இந்த கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் நேற்று வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதில், திண்டுக்கல் - கவிஞர் திலகபாமா, அரக்கோணம் - கே.பாலு, ஆரணி - கணேஷ் குமார், கடலூர் - தங்கர் பச்சான்,  மயிலாடுதுறை - ம.க ஸ்டாலின், கள்ளக்குறிச்சி - தேவதாஸ் உடையார், சேலம்  - அண்ணாதுரை, விழுப்புரம் - முரளி சங்கர், காஞ்சிபுரம்  - ஜோதி வெங்கடேசன்,  தருமபுரி – அரசாங்கம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் தருமபுரி வேட்பாளர் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக சவுமியா அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 

இதையும் படிங்க: மக்களவை தேர்தல் 2024.. தருமபுரி வேட்பாளராக களம் காண்கிறார் சவுமியா அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!

இந்நிலையில், திமுக எம்.பி.  செந்தில்குமார் தருமபுரி மக்களை பார்த்தா உங்களுக்கு எப்படி இருக்கு என பாமகவை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: இல்ல தெரியாம தான் கேட்கிறேன், தர்மபுரி மக்களை பார்த்தா உங்களுக்கு எப்படி இருக்கு.  தர்மபுரியில் வாழும் பாட்டாளி சொந்தங்களே உங்களுக்கும் சேர்த்து தான் என் குரல் என பதிவிட்டிருந்தார். இந்நிலையில், பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே திமுக எம்.பி. செந்தில்குமார் தனது எக்ஸ் தள பதிவை நீக்கியுள்ளார். 

இதையும் படிங்க: பிரதமர் சொன்னதாலே தேர்தலில் நிற்கிறேன்! எனக்கு டெல்லி அரசியலை விட தமிழ்நாடு அரசியல் தான் பிடிக்கும்! அண்ணாமலை!

Follow Us:
Download App:
  • android
  • ios