திடீரென டயர் வெடித்து புளியமரத்தில் மோதிய தனியார் பேருந்து; 30க்கும் மேற்பட்டோர் காயம்
தருமபுரியில் தனியார் பேருந்து டயர் வெடித்து புளிய மரத்தில் மோதிய விபத்தில் 30 பயணிகள் காயமடைந்தனர்.
தருமபுரி பேருந்து நிலையத்தில் இருந்து இண்டூர் வழியாக ஒகேனக்கல் வரை தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதிவேகமாக சென்ற இந்த பேருந்தில் அதிக அளவில் பயணிகள் இருந்ததால் பாரம் தாங்காமல் இண்டூர் அருகே செல்லும்போது முன் டயர் வெடித்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட பேருந்து பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பேருந்து ஓட்டுநர் வீரமணிக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை 108 அவசர ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
4 நாட்களாக தேடப்பட்ட 2 வயது குழந்தை ஸ்பீக்கர் பெட்டியில் சடலமாக மீட்பு; உறவினர்கள் கதறல்
பேருந்து புளிய மரத்தில் மோதும் முன்பு எதிர் திசையில் எந்த வாகனமும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. குறிப்பாக தருமபுரியில் இருந்து ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் மூலம் செல்கின்றனர். இருவழி சாலை என்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
ஓசி பணத்துக்கு நிற்க மாட்டியா? சேர் கேக்குதா? உரிமைத் தொகைக்காக வந்த பெண்களை வசை பாடிய அதிகாரி
இரு வழிச்சாலையாக உள்ள இந்த சாலைகளை விரிவுபடுத்தி நான்கு வழிச்சாலையாக மாற்றி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.